பார்லி. தேர்தலில் தமாகா போட்டி: ஜி.கே.வாசன்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி: அயோத்தியில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரலாற்று சிறப்புமிக்கது. தமிழகத்தில் கேலோ விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருவது வரவேற்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை தமாகா ஆதரிக்கிறது. கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் தந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியூகங்களின் அடிப்படையில் இயக்கப்பணி, மக்கள் சந்திப்பை தமாகா அதிகரித்து கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் முடிவுகளை தாமதமின்றி அறிவிப்போம். நாடாளுமன்ற தேர்தலில் தமாகா போட்டியிடும். தொகுதிகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post பார்லி. தேர்தலில் தமாகா போட்டி: ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Related Stories: