ரூ.2000 மாத்திட்டீங்களா?.. ரூ. 2000 நோட்டை வாங்க மாட்டோம் என வர்த்தகர்கள் அறிவிப்பு; வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி நாள்!!

டெல்லி : ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெருவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவகாசம் நிறைவடைவதால் பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் பொதுமக்களிடம் ரூ.2000 நோட்டுகளை பெறுவதை ஏற்கனவே நிறுத்திவிட்டனர்.வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுக் கொள்ள இன்னும் ஒரு நாளே உள்ளது. ரிசர்வ் வங்கி தகவலின்படி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை நாட்டில் புழக்கத்தில் இருந்த 93% ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

The post ரூ.2000 மாத்திட்டீங்களா?.. ரூ. 2000 நோட்டை வாங்க மாட்டோம் என வர்த்தகர்கள் அறிவிப்பு; வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி நாள்!! appeared first on Dinakaran.

Related Stories: