டாக்கா: வங்கதேசத்தின் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து டாக்கா நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. பைராப் ரயில் நிலையத்தை மாலை 4.15 மணிக்கு கடந்த போது, அதே பாதையில் பின்னால் வந்த சரக்கு ரயில், அதன் மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், பயணியர் ரயிலின் 2 பெட்டிகள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
The post வங்கதேசத்தில் பயங்கரம் 2 ரயில்கள் மோதி 17 பேர் பலி appeared first on Dinakaran.
