×

வங்கதேச தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு மேலும் ஒரு மாஜி தேர்தல் ஆணையர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது நடந்த பொது தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சி குற்றம்சாட்டி வந்தது.இது தொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நூருல் ஹூடா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இன்னொரு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான காஸி ஹபிபுல் அவல் நேற்று கைது செய்யப்பட்டார் என போலீஸ் துணை ஆணையர் தலேபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

The post வங்கதேச தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு மேலும் ஒரு மாஜி தேர்தல் ஆணையர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Khaleda Zia ,BNP party ,Sheikh Hasina ,Former ,Chief Election Commissioner ,Nurul Hooda ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...