அய்யம்பட்டியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ரூ.59 லட்சத்தில் 2 கிமீ தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி தீவிரம்

*மகிழ்ச்சியில் கிராம மக்கள்

சின்னமனூர் : அய்யம்பட்டியில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து வருவதால் அதனை போக்கிடும் விதமாக கூடுதல் குடிநீருக்கு புதிய இரண்டு ஆழ்குழாய் சுண்டைக்காயன் குளத்தில் அமைத்து குழாய் பதிப்பிற்கும், புதிய மேல் நிலைத்தொட்டியும் கட்டும் பணி துவங்கியதாலும் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாததை திமுக ஆட்சியில் நிறைவேற்றுவதால் அய்யம் பட்டி மக்கள் அய்யம் போக்கி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தான் அதிகம். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளில் முக்கியமான உயிர் காக்கும் மருந்தாகவும், பிறத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்கனவே முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அய்யம்பட்டியில் 70 ஆண்டுகளையும் தாண்டி வருடத்தில் தை மாதத்தில் ஏழைகாத்தமன், வல்லடிகார சுவாமிகளின் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரு நாள் பிரமாண்ட திருவிழாவாக ஜல்லிகட்டு. திருவிழா ஊரே ஒன்று கூடி பிரமாண்ட திருவிழா நடைபெறும். அதற்காக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து அய்யப்பட்டி ஜல்லிகட்டு திருவிழாவிற்கு வந்து செல்வதால் தமிழகம் அளவில் அய்யம்பட்டி பெரும் புகழ் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டிற்கு மேலாக பொதுமக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், கால் நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும் குடி தண்ணீரும் போதுமான அளவிற்கு கிடைக்காமல் மிகுந்த பற்றாக்குறை நீடித்து வந்தது. குடிதண்ணீர் போதியளவு கிடைக்காததால் அருகில் உள்ள புலிகுத்தி கிராமத்திலும் மற்றும் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதிக்கும் குடங்கள், பானைகளுடன் ஆட்டோ, டூவீலர், சைக்கிள்களில் சென்று தண்ணீரை பிடித்து எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் விவசாயிகள் கடந்த அதிமுக ஆட்சியில் கூடுதல் குடிதண்ணீர் கிடைப்பதற்கு போடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்து வலியுறுத்தி வந்தனர்.

இதனால் கேட்ட பெயருக்காக அய்யம்பட்டி மேற்கு புறம் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. அவை தர மற்றதாக இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீரை அதில் தேக்கி வைக்காமல் இன்னும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது.அதன் பிறகு அதிமுக ஆட்சியில் புதிய ஆழ்குழாய் உருவாக்கப்பட்டு கூடுதல் குடிதண்ணீருக்கு வழி வகை ஏற்படுத்தாமல் அய்யம்பட்டி கிராம மக்களை அலட்சியப்படுத்தி வந்தனர்.

இதற்கிடையில் புதிய நிர்வாகமாக திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாத்துரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கூடுதல் குடிநீர் தேவைக்கு ஆழ்குழாய் உருவாக்கப்பட்டு புதிய குழாய் லைன் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மேலும் தற்போது அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவராக தனலட்சுமி அண்ணாத்துரை இருந்து வருகிறார்.

இந்த கோரிக்கையை ஏற்று சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், பாரத மணி உள்ளிட்டோர் அய்யம்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அய்யம்பட்டி கிராம மக்களுக்கு எதிர்கால தேவையையும் கருத்தில் கொண்டு கூடுதல் குடிதண்ணீருக்கு இன்னொரு திட்டம் கொண்டு வருவதற்கு சின்னமனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்ற ப்பட்டது.மேலும் தேர்தல் வாக்குறுதியாகவும் தந்ததால், தற்போது ஜே.ஜே.எம் திட்டத்தின் வாயிலாக 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றினர்.

அந்த 59 லட்சம் நிதியில் மார்க்கையன் கோட்டை, குச்சனூர் இரண்டு பேரூராட்சிகளுக்கு இடையில் 61 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் சுண்டைக்காயன் குளத்தினை தேர்வு செய்தனர். இப்பகுதியில் இருக்கும் வயல் வெளி பகுதிகளுக்கு பாசனநீர் பற்றாக் குறையை சரி கட்டுவதற்காக,இரு போகம் நெல் சாகுபடிக்காகவும், பிற விவசாயத்திற்காகவும் முல்லைப் பெரியாற்று தண்ணீரும், மழை நீரும் சேர்ந்து அங்கு தேக்கப்படும்.தொடர்ந்து எட்டு மாதம் தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர் அதிகளவில் ஊற்றெடுக்கும் தாய் குளமாக விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இந்த சுண்டைக்காயன் குளத்தில் இரண்டு புதிய ஆழ்குழாய்கள் அமைத்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் புதிய குடிநீர் குழாய் பதித்து அய்யம்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

ஏற்கனவே கோயில் எதிர்புறம் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பழைய தொட்டியினை இடித்து அகற்றி அருகில் ஒரு லட்சம் கொண்ட புதிய மெகா மேல் நிலைத்தொட்டியும் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு கூடுதல் குடிதண்ணீராக பற்றாக்குறை போக்கிடும் வகையில் இப்பணிகள் துவக்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர் பவுன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கூறுகையில்,‘‘அய்யம்பட்டி குடிநீர் பற்றாக்குறை அதிக அளவில் இருந்து வருகிறது. அதிக மக்கள் தொகை அதிகரிப்பதாலும், வீடுகள் குடியிருப்புகளும் கூடுவதாலும் குடிநீர் தேவை கூடு தல் தேவையாக இருக்கிறது. விவசாயிகள் கால்நடைகள் அதிக அளவில் வளர்ப்பதால் பிறத்தவை களுக்கும் தண்ணீர் தேவைப்படு கிறது.

தற்போது சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திலும் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது 59 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் தண்ணீருக் காக புதிய இரண்டு ஆழ்குழாய்கள் அமைத்து குடிநீர் குழாய்கள் பதித்து ஜேஜேஎம் திட்டத்தில் புதியதாக ஏற்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றனர்.

The post அய்யம்பட்டியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ரூ.59 லட்சத்தில் 2 கிமீ தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: