×

ஆக்சியம்-4 விண்வெளி பயணம் நாளை மறுநாள் பூமியில் இருந்து புறப்படும் 4 விண்வெளி வீரர்கள்: இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவும் செல்கிறார்

புதுடெல்லி: ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம் -4 நான்காவது மனித விண்வெளி பயணம் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புறப்பட்டுச்செல்கின்றனர். இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். 10ம் தேதி பூமியில் இருந்து புறப்படும் இவர்கள் 28 மணி நேர பயணத்துக்கு பின் 11ம் தேதி இரவு 10 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்காவை சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் செல்கின்றனர். கடந்த 1984ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்திற்கு பின் 41 ஆண்டுகள் கழித்து ஆக்சியம் 4 திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆக்சியம்-4 விண்வெளி பயணம் நாளை மறுநாள் பூமியில் இருந்து புறப்படும் 4 விண்வெளி வீரர்கள்: இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவும் செல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Earth ,Subhanshu Shukla ,New Delhi ,Axiom Space ,NASA ,Kennedy Space Center ,Florida, USA ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...