×

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு: வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு

அண்ணாநகர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதே நேரத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து காணப்பட்டது. ஆடி மாதத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படும். கடந்த வாரம் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் அதிகளவில் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆடி 4வது வெள்ளியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடு கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1000, மல்லி ரூ.800, ஐஸ் மல்லி ரூ.600, ஜாதி மல்லி, முல்லை ரூ.500, அரளி ரூ.250, சாமந்தி ரூ.140, சம்பங்கி ரூ.150, சாக்லேட் ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்திருந்தது. இந்நிலையல் நேற்று காலை வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் காராமணி ரூ.60ல் இருந்து ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.70ல் இருந்து ரூ.65க்கும், சேனைக்கிழங்கு ரூ.75ல் இருந்து ரூ.65க்கும், பாவக்காய் ரூ.50 இருந்து ரூ.40க்கும், சேம கிழங்கு ரூ.50ல் இருந்து ரூ.40க்கும், காலிபிளவர் ரூ.50ல் இருந்து ரூ.30க்கும், நூக்கல் ரூ.50ல் இருந்து ரூ.35க்கும், தக்காளி ரூ.55ல் இருந்து ரூ.25க்கும், வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.25க்கும், கத்திரிக்காய் ரூ.40ல் இருந்து ரூ.30க்கும், பீர்க்கங்காய் ரூ.40ல் இருந்து ரூ.30க்கும், சவ்சவ், முள்ளங்கி ரூ.30ல் இருந்து ரூ.20க்கும், புடலங்காய், கோவைக்காய் ரூ.30ல் இருந்து ரூ.25க்கும், கொத்தவரங்காய் ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.150ல் இருந்து ரூ.50க்கும், கேரட் ரூ.150ல் இருந்து ரூ.100 க்கும், பீட்ரூட் ரூ.50க்கும், உருளை கிழங்கு ரூ.45க்கும், காராமணி ரூ.40க்கும், சுரக்காய் ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.30க்கும், வெள்ளரிக்காய் ரூ.20க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், பட்டாணி ரூ.200ல் இருந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், கடந்த வாரம் முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. ஆடி வெள்ளியை முன்னிட்டு தற்போது அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதேபோல், கடந்த 2 மாதமாக வரத்து குறைவால் காய்களின் விலை அதிகமாக இருந்தது. நேற்று காலை 700 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்துள்ளது. அதனால் விலை சற்று குறைந்துள்ளது. இந்த மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகத்தான் இருக்கும், என்றார்.

The post ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு: வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Adi Villi ,Annanagar ,Koyambedu ,Audi Villi ,Audi ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...