நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா?.. 2024 மக்களவை தேர்தல் முடிவில் 1.7 லட்சம் வாக்குகளுடன் இந்தூர் இரண்டாமிடம்..!!

போபால்: மத்திய பிரதேசம் மாநில இந்தூரில் நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், கடைசிக்கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைந்தது.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதில் வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டாவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் நோட்டா 2வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பீகார் மாநிலத்தின் கோபல்கஞ்ச் தொகுதியில் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவானதே சாதனையாக காணப்பட்ட நிலையில், தற்போதை அந்த சாதனையை இந்தூர் மக்களவை தொகுதி முறியடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கோபல்கஞ்ச் தொகுதியில் 51 ஆயிரத்து 607 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் இந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா?.. 2024 மக்களவை தேர்தல் முடிவில் 1.7 லட்சம் வாக்குகளுடன் இந்தூர் இரண்டாமிடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: