ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: ராணுவ தளபதிகளின் 5 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் சீனா, பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் தேசிய பாதுகாப்பு சவால்கள் குறித்த விவாதம் நடந்தது. இந்திய ராணுவ தளபதிகளின் மாநாடு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆண்டுக்கு 2 முறை நடக்கும். இந்நிலையில், ராணுவ தளபதிகளின் 5 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தலைமையில் நடக்கும் மாநாட்டில், ராணுவத்தை நவீன மயமாக்குவது,மூன்று படைகளின் கூட்டு தன்மை,ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.

முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விமான படை தலைமை தளபதி வி.ஆர்.சவுதாரி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். நாளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,‘‘ தற்போதைய பாதுகாப்பு நிலைமை, ராணுவத்தின் தயார் நிலை ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மேலும் பிராந்திய பாதுகாப்பு நிலைமை, சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிக்கப்படும். அதே போல், ஹமாஸ்- இஸ்ரேல், ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்தும் விவாதிக்கப்படும்’’ என்றனர்.

The post ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: