அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் “இந்தியா” என்ற சொல்லை தவிர்த்து “பாரதம்” என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி என ஆளுநர் ரவி கூறியுள்ளார். இதேபோல் இந்தியா என சொல்வதை விட பாரதம் என்று அழைப்பதே சரி என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசி இருந்தார்.

இந்தியா என அழைப்பதை நிறுத்திவிட்டு பாரதம் என அழைக்க தொடங்க வேண்டும் என மோகன் பகவத் கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டியதில் இருந்தே இந்தியா என்ற சொல் காந்து வருகிறது. வளர்ச்சிமிகு நாடாக இந்தியாவை மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. மோடியால் 9 ஆண்டுகளுக்கும்ப பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: