ரவுடியை சுட்டுப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு பாராட்டு!

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை சுட்டுப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி விரைந்த அதி விரைவு குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ரெளடி ரோஹித் ராஜன் மீது மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கு உள்பட 13 குற்ற வழக்குகள் உள்ளது

ரோஹித் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்க காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, காவலர்கள் இருவரை ரெளடி ரோஹித் அரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சி செய்துள்ளார். தற்காப்புக்காக, ரோஹித்தை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ரோஹித் ராஜன் காயம் அடைந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஹித் தாக்கிய இரு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்று கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டு கைது செய்த உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

The post ரவுடியை சுட்டுப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு பாராட்டு! appeared first on Dinakaran.

Related Stories: