சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், ப்ராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ப்ராஜெக்ட் கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.600லிருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகண்டிக்கத்தக்கது. மாணவர்களின் நலன்,பொருளாதார பின்னணியை கருத்தில் கொண்டு தேர்வுக் கட்டண உயர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி அண்ணா பல்கலைக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல், பிற பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டமிருந்தால், அதையும் கைவிட வேண்டும்.
The post அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.