காரில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என்று தெரிவித்தனர். விபத்திற்குள்ளான காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் விஜய் யாதவ், பல்பொருள் அங்காடி காவலாளி நாகசுந்தரம் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
