அப்போது திடீரென பேருந்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து 12வது பிளாட்பார்மில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் வீரய்யா, பேருந்துக்காக காத்திருந்த பெண் குமாரி என்பவரும், 6 வயது சிறுவன் அயான்ஸ் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் டிரைவர் பிளாட்பார்மில் இருந்து புறப்பட ரிவர்ஸ் எடுப்பதற்கு பதில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டார்.
இதனால் பிரேக் பிடிக்காமல் போய்விட்டதை அடுத்து வாகனம் நிலைத்தடுமாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டிரைவர் பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆந்திராவில் பேருந்து நிலைய நடைமேடை மீது பேருந்து ஏறிய விபத்தில் ஓட்டுனர் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.