×

அம்பாலாவில் இரவு முழுவதும் மின்தடை

அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பூரண மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமர் பிறப்பித்த உத்தரவில், “மக்கள் மற்றும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு முழுவதும் மின்தடைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி வௌிப்புற விளக்குகள், தெரு விளக்குகள் மற்றும் விளம்பர பலகைகளுக்கு பயன்படுத்தப்படும் இன்வெட்டர் அல்லது ஜெனரேட்டர் அல்லது வேறு ஏதேனும் மின்பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் வீடு உள்ளிட்ட கட்டிடங்களின் உள்ளே இருக்கும் வௌிச்சம் வௌியே தெரியாத வகையில் ஜன்னல்கள், கதவுகள் கடினமான திரைசீலைகளால் மூடவும் உத்தரவிடப்பட்டது” என்றார்.

The post அம்பாலாவில் இரவு முழுவதும் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Ambala ,Ambala district ,Haryana ,District Collector ,Ajay Singh Tomar ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...