பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித பாட மதிப்பெண் நிறுத்தி வைத்த நிலையில் 34 பேரும் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித பாட மதிப்பெண் நிறுத்தி வைத்த நிலையில் 34 பேரும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு மைய கண்காணிப்பாளர் உதவியதாக புகார் எழுந்தது. குற்றச்சாட்டு உறுதியானதால் அறை கண்காணிப்பாளர்கள் உள்பட 5 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் பணிபுரிந்த அறைகளில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித பாட மதிப்பெண் நிறுத்தி வைத்த நிலையில் 34 பேரும் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: