ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி,
புழுங்கலரிசி,
பாசிப் பருப்பு – தலா ஒரு கப்,
ஜவ்வரிசி, ரவை – தலா அரை கப்,
பொடித்த வெல்லம் – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும், ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.

The post ஐந்தரிசி பணியாரம் appeared first on Dinakaran.