இறால் டிக்கா மசாலா

தேவையானவை :

இறால் – 1/2 கிலோ,
வெங்காயம் – 3,
எலுமிச்சை சாறு – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
க்ரீம் தயிர் – தேவைக்கேற்ப,
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி பூண்டு – தேவைக்கேற்ப,

செய்முறை:

ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். இறாலை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றவும். அது உருகியதும். ஊற வைத்த இறாலை அதில் கொட்டி 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். அது நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். அதன் பின்னர் வெங்காயத்தின் மீது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியனவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கவும். நன்றாக மனம் வரும் வரை வதக்கவும். பின்னர் மிதமான சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேக விடவும். அடுத்ததாக க்ரீம் தயிர், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்கவும். இதோடு வேக வைத்த இறால்களை சேர்க்கவும்.

The post இறால் டிக்கா மசாலா appeared first on Dinakaran.