அதிமுக கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்புக்கான பேச்சு நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு குறைந்துள்ளது. 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். 13 இடங்களில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளனர். அதிமுகவின் விசுவாச தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். மக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அமித் ஷா சொன்ன ஆலோசனைகளை ஏற்காததற்கான பலனை எடப்பாடி பழனிசாமி இன்று அனுபவிக்கிறார். இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பயத்தில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் வெற்றி பெற முடியும்.. ஜெயக்குமார் சிரிப்பு அரசியல்வாதி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.