சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், புதிய பொறுப்பு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.