விவசாயிகளை காப்பாற்ற வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தேவை: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சந்தைகளில் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இப்போது மொத்த விலை சந்தைகளில் கிலோ ரூ.5க்கும், சில்லறை விலைக்கடைகளில் ரூ.10க்கும் விற்கப்படுகிறது. அதனால், பல இடங்களில் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே அழுகுவதற்கு உழவர்கள் விட்டு விடுகின்றனர். சந்தைகளில் கத்தரிக்காயின் விலையும் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை என்ற நிலையிலிருந்து கிலோ ரூ.10 என்ற அளவுக்கு சரிந்து விட்டது. அதனால், கத்தரிக்காயின் கொள்முதல் விலையும் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டது. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு காய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான். எனவே, இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post விவசாயிகளை காப்பாற்ற வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தேவை: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: