The post ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’ appeared first on Dinakaran.
‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்திக் சிதம்பரம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்க கூடாது, மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்க கூடாது என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு விபரீதமான முடிவு. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக்கு இன்னும் அதிக மருத்துவர்கள் தேவை. அதிக மருத்துவர்களை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக ஒன்றிய அரசின் உத்தரவு உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பிரிவு என்பது நிரந்தர பிரிவா அல்லது காதலர்களுக்குள் இருக்கும் தற்காலிக பிரிவா என தெரியாது. அவர்கள் ஒன்றாக இருந்தாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.