குட்கா வழக்கு தள்ளிவைப்பு

புதுடெல்லி: குட்கா, பான்மசாலாவுக்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்ற பெஞ்சு ரத்து செய்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி மற்றும் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்,\” பான்மசாலாவில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தான் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு தரப்பில் இருந்து எந்த விதி மீறல்களும் நடைபெறவில்லை என்று வாதிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

The post குட்கா வழக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: