ஆதிதிராவிடர் மானிய கோரிக்கையின்போது பதிலுரையை புறக்கணித்தது ஏன்? காங். உறுப்பினர் கேள்விக்கு அதிமுக பதில்

சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசியதாவது: ஆருத்ரா நிதி நிறுவனம் அரசியல் கட்சியின் பின்புறத்தில் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. எந்த அரசியல் கட்சி, யார் செயல்பட்டார்கள் என்று பதிலுரையில் முதல்வர் தெரிவிக்க வேண்டும். இளம் ஐபிஎஸ் அதிகாரி பல்பீர்சிங் போன்ற ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த காவல் துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பற்றி அனைவரும் பேசினார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சரின் பதிலுரையை ஒரு கட்சி புறக்கணிக்கிறது.

(அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.)
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: வெளிநடப்பு செய்வது எங்களது உரிமை. இதுபற்றி அவர் பேசுவதற்கு உரிமை இல்லை.
அமைச்சர் துரைமுருகன்: ஆதிதிராவிடர் பதிலுரையில் நீங்கள் இல்லை, புறக்கணித்தீர்கள் என்றுதான் கூறினார்.
எடப்பாடி: ஆதிதிராவிடர் நலத்துறை மானியத்தை புறக்கணிக்கவில்லை. விவாதத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசி உள்ளனர்.
செல்வப்பெருந்தகை: எங்களுக்கு பேச்சுரிமை இருக்கிறது. நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. (அதிமுகவினர் மீண்டும் எதிர்ப்பு) எஸ்.பி.வேலுமணி (அதிமுக): ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு எங்களை தாக்கி பேசுகிறார். இவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லையா? நேரடியாக ஒளிபரப்பு செய்யாததால் புறக்கணிப்பு என்று சொல்லிவிட்டுதான் போகிறோம்.

The post ஆதிதிராவிடர் மானிய கோரிக்கையின்போது பதிலுரையை புறக்கணித்தது ஏன்? காங். உறுப்பினர் கேள்விக்கு அதிமுக பதில் appeared first on Dinakaran.

Related Stories: