சென்னை: பட்டியலின மக்களை இழிவுபடுத்திய விவகாரத்தில் நடிகை குஷ்பு வீடு நாளை முற்றுகையிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மக்களை இழிவுப்படுத்துகின்ற வகையில் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்று கூறியதை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு திரும்ப பெற மாட்டேன், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஆணவத்தோடு பேசியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கம் காமராஜர் சாலைக்கு அருகில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவரான எனது தலைமையில் 28ம் தேதி(நாளை) காலை 10.30 மணியளவில் முற்றுகை போராட்டம் நடைபெறும். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
The post பட்டியலின மக்களை இழிவுபடுத்திய விவகாரம் சென்னையில் நடிகை குஷ்பு வீடு நாளை முற்றுகையிடப்படும்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.