இதனால் மகளிர் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிபடி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 300 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் மூலம் விற்பதால் விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மகளிருக்கு உரிமை தொகை முறையாக வங்கிகளில் செலுத்தப்பட்டு வருகிறது. 15 லட்சம் மகளிருக்கு கலைஞர் உரிமை தொகை வழங்கப்படுகிறது” என்றார். இதைத்தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, 10 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பு இயந்திரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2 ஆயிரம் மகளிருக்கு புடவைகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் மாலதி, நிர்வாகிகள் வேதாச்சலம், வேணு, கோபி, சிலம்பரசன், சரத்குமார், இளங்கோ, பத்மா, சசிகுமார், ராம்குமார் மற்றும் இளைஞர்கள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.