×

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் இடைப்பாடி அருகே கனிமொழி எம்.பி., பிரசாரம்

இடைப்பாடி, நவ.30: இடைப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரத்தில், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.
நிகழ்ச்சிக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் கூறுகையில், அதிமுக ஆட்சியில்  10ஆண்டுகளாக எந்த நலத்திட்ட உதவிகளும், திமுகவை சேர்ந்த மகளிர் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கவில்லை என்றனர். பின்னர், கனிமொழி எம்.பி., பேசுகையில், ‘பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெறவேண்டும் என, கலைஞர் 3 லட்சத்து 20ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஏற்படுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின், குழுக்களை விரிவாக்கம் செய்து, பெண்களிடம் பாராட்டு பெற்றார். இன்றைக்கு அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
தைரியமாக பிரச்னைகளை சொல்ல வந்தாலும் தாக்கப்படுகிறார்கள்.

அதிமுக அரசுக்கு முடிவு கட்டி, திமுக ஆட்சி அமைய, ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த சபதம் எடுப்போம். விவசாயிகளுக்கு  முதுகெலும்பாக, திமுக என்றும் இருக்கும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி., சேலம் மேற்கு மாவட்ட அவை தலைவர் கோபால், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் காவேரி, மாவட்ட  துணை செயலாளர்கள் சுந்தரம்,  சம்பத்குமார் கீதா, தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், காசி, அம்மாசி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், கருணாநிதி, நிர்மலா, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, இடைப்பாடி திமுக நகர செயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் கொங்கணாபுரம் பரமசிவம், எடப்பாடி நல்லதம்பி, நங்கவள்ளி ரவிச்சந்திரன், இளைஞரணி முத்தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், செல்வகுமார், மாதையன், வடிவேலு, சிங்காரவேலு, தங்கவேலு, ராமலிங்கம், ரவி, ராஜமாணிக்கம், ரவி, நெடுஞ்சேரலாதன், சரவணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi MP ,campaign ,Stalin ,voice interlude ,
× RELATED நாளை முதல் 2 நாட்கள் கனிமொழி எம்பி...