×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி, நவ.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாமை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் நேரில் ஆய்வு செய்தார். பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி போகனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமை, வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், பால் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தி இயக்குனருமான வள்ளலார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு வள்ளலார் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் பேசியது:

வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடம் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் போன்ற படிவங்களை பெற்று வீடு,வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்று(12ம்தேதி), டிசம்பர் 12, 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது. முகாம்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற அரசு இணைய தள முகவரி வழியாகவும், இ-சேவை மையங்களின் மூலமும், பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து, இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எஸ்பி பண்டிகங்காதர், டிஆர்ஓ சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரகுகுமார், உதவி கலெக்டர்கள் குணசேகரன், கற்பகவள்ளி, துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், பிஆர்ஓ (பொ) ராஜபிரகாஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம், மற்றும் தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Krishnagiri district ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்...