கிருஷ்ணகிரி அருகே திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.11: கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே மரிக்கம்பள்ளியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், வாக்குச்சாவடி முகர்கள் வாக்காளர் பட்டியல் தயாரிககும்போது படிவங்கள் சரி பார்ப்பது, வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், இறந்தவர்கள், வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றவர்கள், 18 வயது பூர்த்தியான அனைவரையும் கண்டுபிடித்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

எனவே, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் அரியணையில் ஏற்ற இதுவே சரியான தருணம்.

எனவே, தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு மையங்களில் கவனமுடன் பணியாற்றுவதும் அவசியம் என்றார். கூட்டத்தில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசு மூர்த்தி, நிர்வாகிகள் வெங்கட்டப்பன், சந்திரசேகர், கோவிந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கிருபாகரன், சென்றாயன், கோபி உள்ளிட்ட நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: