நூல் வெளியீட்டு விழா

காரைக்குடி, நவ. 10:  காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் எழுதிய விண்ணப்பிக்கும் முறைகளும், விண்ணப்ப படிவங்களும் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. ராமநாதன் செட்டியார் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் நூலை வெளியிட, தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன் பெற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற துணை இயக்குநர் மனோகரன், ஒய்வு பெற்ற முதன்மைகல்வி அலுவலர் பரமதயாளன், பள்ளிதுணை ஆய்வாளர் வேலுச்சாமி, ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் ஹென்றிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூல் ஆசிரியர் சண்முகநாதன் ஏற்புரை வழங்கினார்.

Related Stories: