30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்

நாகர்கோவில், நவ.6: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 27 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 17 ஆண்டாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த சில ஆண்டாக எண்ணற்ற வருவாயை ஈட்டி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தாம்.

அது நிராகரிக்கப்பட்டு 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசு 10 சதவீத போனஸ் மட்டுமே என அரசு அறிவித்துள்ளது.  இது பணியாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. எனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு வரையறைகளை தளர்த்தி 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: