அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு மனுக்களை வாங்கினர்

தேன்கனிக்கோட்டை, அக்.22:  தளி அருகே, அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் வசிக்கும் கெபரோதொட்டி கிராமத்தில், முதன்முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தளி ஊராட்சி ஒன்றியம், ஜவளகிரி ஊராட்சி, கர்நாடக மாநில எல்லையையொட்டிய கெபரோதொட்டி கிராமத்தில், 50 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2 கிமீ கரடு முரடான சாலையில் நடந்து, நந்திமங்கலம் வரை வந்து தளிக்கு வரவேண்டும். இந்த கிராமத்தில் சாலை, கழிவு நீர்கால்வாய் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் இல்லை. பல ஆண்டுகளாக கிராம மக்கள், அடிப்படை வசதி கேட்டு, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சிவண்ணா, ஜவளகிரி ஊராட்சி தலைவர் நாகரத்தினா ரேணுகாபிரசாத், துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர், இந்த கிராமத்திற்கு நேற்று முதன் முறையாக நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

Related Stories: