பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் பயில புளியங்குடி மாணவருக்கு அனுமதி கடிதம்

நெல்லை, அக்.18:  பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்காக புளியங்குடி மாணவர் முகம்மது ஷெரிப் அமீனுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில் உலகப்புகழ் பெற்ற பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் தற்போது மருத்துவ சேர்க்கை நடந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில்  ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றன.  இந்தநிலையில் புளியங்குடி மாணவர்  அல் ஷெரிப் அமீன்  மருத்துவ சேர்க்கைக்காக தனது பெற்றோருடன் வந்து விண்ணப்பித்தார்.  இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அலுவலர் மாரிமுத்து மருத்துவ கல்லூரியின் சிறப்புகளை காணொலி காட்சி மூலம் மாணவருக்கும் அவரது பெற்றோருக்கும் விளக்கினார். விண்ணப்பத்தை ஆய்வு செய்த நிறுவன பொறுப்பாளர்கள் சாம்ஹெல்மன், வளவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள பரிந்துரை செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட பிலிப்பைன்ஸ் பென்ஸ் நிறுவன நிர்வாகி சுப்பிரமணியன், நெல்லை மைய இயக்குனர் டாக்டர். ஆனந்தராஜ்,  மாணவர்  முகம்மது  ஷெரிப் அமீனிடமிருந்து  விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மைய அலுவலர்கள் ராமலட்சுமி , வித்யலட்சுமி, கார்த்திகா, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: