×

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in ,  http: www.scholarships.gov.in    என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020-21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1,35,127 மாணவ, மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவித் தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். எனவே, தகுதியான மாணவ- மாணவிகள் வரும் 31ம் தேதி வரை, மேற்படி இணைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்  http:www.minorityaffari.gov.inheme என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு