திருக்கடையூர் அருகே 5000 பனை விதைகள் நடும் பணி

தரங்கம்பாடி, அக். 16: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே 5000 பனை விதைகள் நடும் பணியை நாகை மாவட்ட உதவி கலெக்டர் துவங்கி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1 லட்சத்து 36 ஆயிரம் பனை கன்றுகளை நட திட்டமிட்டு அதற்கான பணிகள் ஊராட்சிகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சியில் நாகை மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி கலந்து கொண்டு 5 ஆயிரம் பனை விதைகளை நடும் பணியை, ராமசந்திரன் வடிக்கால் வாய்க்கால் ஒரம் பனைவிதையை விதைத்து தொடங்கி வைத்தார். இந்த பணியானது சாலையோரங்களிலும் நீர்பாசன வாய்க்கால் ஓரங்களிலும் நடைபெற்று வருகின்றது. அவருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) தியாகராஜன், ஒன்றிய பொறியாளர் சோமசுந்தரம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் தீபாமுனுசாமி, ஊராட்சி துணை தலைவர் ஆனந்திஆனந்தன், ஊராட்சி செயலாளர் மதியழகன், ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: