×

10ம் வகுப்பு தனித்தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 460 ஆசிரியர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, அக்.1: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு தனித்தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 3 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியில் 460 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மைய தொடர்பு அலுவலரான நரசிம்மன், பள்ளித்துறை ஆய்வாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். இன்றுடன் (1ம்தேதி) இப்பணி நிறைவடைகிறது.

Tags : teachers ,
× RELATED நடமாடும் ரேஷன் கடை துவக்கம் எம்எல்ஏ பங்கேற்பு