திருச்செந்தூரில் மக்கள் நீதிமன்றம்

திருச்செந்தூர், மார்ச் 19: திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் நிலுவைத்தொகை வசூலிப்பதற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி தலைமை வகித்தார். இதில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, வைகுண்டம், குரும்பூர் வங்கி கள அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் வங்கியில் கடன் நிலுவைத்தொகை குறித்த 120 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் சமரசத்தீர்வு ஏற்படுத்தியதுடன், ரூ. 10 லட்சத்து 62 ஆயிரத்து 900 தொகை வசூல் செய்யப்பட்டது. திருச்செந்தூரில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விளக்கமளிக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: