×

டூவீலர் மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 19:குருபரப்பள்ளி அடுத்த நெடுசாலை கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி(50). இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் முனுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED தாம்பரம் - முடிச்சூர்...