வேன் மோதி உயிரிழந்த மெக்கானிக் குடும்பத்துக்கு ரூ27.65 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னையை சேர்ந்தவர் சாம்சன் (47). டிவி மெக்கானிக். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 28.9.2015 அன்று வேலை சம்பந்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாலையில் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மினி வேன் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சாம்சன் மீது மோதியது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு சிகிச்சைகள் பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து போலீசார், வேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் அவரது மனைவி விஜி மற்றும் உறவினர்கள் ரெஜினா, பிலிப்சன், சென்பகவள்ளி ஆகியோர் சாம்சனின் இறப்புக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் உயிரிழந்த சாம்சன் டிவி மெக்கானிக் வேலை செய்ததாகவும், மாதம் ரூ20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்ததாகவும் தெரிய வருகிறது.

மேலும் அவரது இறப்பு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். எனவே, மனுதாரருக்கு இன்சுரன்ஸ் நிறுவனம் ரூ27 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: