ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் ரயில் நிலையம் எதிரில் ஆஸ்பத்திரி சாலையில் மின்வாரிய டிரான்ஸ்பர் மற்றும் வாகன காப்பகம் உள்ளது. இந்த டிரான்பார்மர் அருகில் நகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பை தொட்டிகளில் ஒன்றில் தீ பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தில் டிரான்பார்மர் அருகில் தரையில் சிதறி கிடந்த குப்பைகளிலும் தீ பரவி எரிந்தது. இது குறித்து ராஜபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதிமக்கள் தகவல் அளித்தனர்.