வத்திராயிருப்பு அருகே அதிமுக பொதுக்கூட்டம்

வத்திராயிருப்பு, மார்ச் 1:  ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வத்திராயிருப்பு அருகே டபிள்யோ புதுப்பட்டியில் நடைபெற்றது.

திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபாமுத்தையா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்படுகிறது என்று பேசினார்.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்ட ஏற்பாடுகளை வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேதுராமலிங்கம் செய்திருந்தார்.

Related Stories: