×

நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரி, பிப்.28:கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம் இணைந்து, பிளாஸ்டிக் இல்லா கிருஷ்ணகிரி-2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஓசூர் மாசுகட்டுப்பாட்டு அலுவலக கோட்ட பொறியாளர் பழனிசாமி, கால்நடை ஆராய்ச்சியாளர் குமரவேல், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் கமலநாதன், நகராட்சி ஆணையாளர் சந்திரா, நகராட்சி பொறியாளர் கோபி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் மொத்த, சில்லரை விற்பனையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில், உதயகுமார், சீனிவாசலு, சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பிளாஸ்டிக் இல்லா கிருஷ்ணகிரி-2020 என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : office ,
× RELATED வெளி மாவட்டங்களுக்கு செல்ல பாஸ் பெற...