×

அரசு ஆடவர் கல்லூரியில் மீன் வளர்ப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் மீன் வளர்ப்பு குறித்து தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. பயிற்சி பட்டறையை கல்லூரி முதல்வர் ரோஸ்மேரி துவக்கி வைத்தார். துறைத் தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை அரசு கல்லூரி பேராசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வண்ண மீன் வளர்ப்பு முறையும், பொருளாதாரமும் என்ற தலைப்பில் பேசினார். இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன், மீன்களைத் தாக்கும் நோய்களும், அவற்றை தடுக்கும் முறைகளும் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்கள் பாரூர் திலேபியா மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று, மீன்களை பார்வையிட்டனர். நிலைய ஆராய்ச்சியாளர் சோமசுந்தரலிங்கம், மீன் வளர்த்தலில் தற்கால நிலை மற்றும் வளர்ப்பு முறைகளை செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையை பிரகாச சாகய லியோன் மற்றும் மணிவேலு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags : Government College ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...