தாரமங்கலத்தில் ஒன்றிய குழு கூட்டம்

ஓமலூர், பிப்.27: தாரமங்கலம் ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சுமதி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில், எம்எல்ஏக்கள் ஓமலூர் வெற்றிவேல், தாரமங்கலம் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். கூட்டத்தில் அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டு, அந்தந்த துறைகள் மூலம் செயல்படுத்தி வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து பேசினர். இதனை தொடர்ந்து திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனை குறித்து பேசினர். அப்போது, குடிநீர் விநியோகத்தை பொறுத்தவரை பல இடங்களில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய சங்ககிரி எம்எல்ஏ ராஜா பேசினார். கூட்டத்தில் தேந்தெடுக்கப்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: