சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு அமைக்கும் சிறப்பு கூட்டம்

சிவகாசி, பிப். 20: சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு அமைக்கும் சிறப்பு கூட்டம் ஊராட்சி தலைவர் உசிலை செல்வம் தலைமையில் நடந்தது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு அமைத்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் சிறப்பு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் உசிலை செல்வம் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் லட்சுமண பெருமாள்சாமி, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது, நிலையான பயன்பாட்டிற்கு வித்திடுவது குறித்த அறிக்கை வாசித்தார்.

ஊராட்சி தலைவர் மற்றும் 7 உறுப்பினர்களை கொண்டு பல்லுயிர் மேலாண்மை குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி தலைவர் உள்பட மகளிர் சுய உதவி குழு லதா, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சரஸ்வதி, சமூக கருத்தாளர் கனிமொழி, விவசாய பிரதிநிதி செல்வகுமார், கால்நடை வளர்ப்பவர் குருவையா, என்.ஜி.ஓ., உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: