×

ஊத்தங்கரை அருகே இரவு நேரத்தில் செம்மரங்களை வெட்டிய மர்ம கும்பல்

ஊத்தங்கரை, பிப்.20: ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்த முயன்ற அண்ணன், தம்பியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி  மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஒன்னகரை காப்புக்காடு நாயக்கனூர் பகுதியில்  நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் செம்மரங்களை வெட்டியுள்ளனர்.  இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில்  வனத்துறை அலுவலர் துரைக்கண்ணு தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  வந்து, செம்மரம் வெட்டப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது  அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வெட்டப்பட்ட செம்மரங்கள்  வீசப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது,  ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன்கள் சின்னகவுண்டர் (27),  மாயக்கண்ணன் (24) ஆகியோர் அப்பகுதியில் சுற்றி திரிந்ததாக தகவல்கள்  வெளியானது. இதனையடுத்து, அவர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும் கிணற்றில் இருந்த செம்மரக்கட்டைகளை சுமார் 4  மணிநேரம் போராடி மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : gang ,Oothankarai ,
× RELATED கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள...