கெங்கவல்லி அரசு பள்ளி சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

கெங்கவல்லி, பிப்.19: கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. தாசில்தார் சிவக்கொழுந்து தலைமை வகித்தார். தீயணைப்புத்துறை நிலை அலுவலர் பெரியசாமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இதில் பேரிடர் மேலாண்மை காலத்தில் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது, பெரும் வெள்ளம் ஏற்பட்டால் மற்றவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கெங்கவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து கெங்கவல்லி முக்கிய வீதிகளில் பேரணிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

Related Stories: