ஐன்ஸ்டீன் கல்லூரியில் அறிவியல் திறன் மேம்பாட்டு போட்டிகள்

நெல்லை, பிப். 19: ஐன்ஸ்டீன்  கல்லூரியில் அறிவியல் திறன் மேம்பாட்டு போட்டிகள் நடந்தது.  ஐன்ஸ்டீன் கல்லூரியில் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் துறை சார்பில்  தென் மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையேயான அறிவியல் திறன் மேம்பாட்டு போட்டி  நடந்தது. கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி சுபத்ரா வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் எழில்வாணன்  தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்  முருகேசன்  முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காமராஜ் அரசு கலைக்கல்லூரி, சுரண்டை ஐகியுஏசி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் அருள் முகிலன்  கலந்து கொண்டார்.  தொடர்ந்து 6 விதமான அறிவியல் சார்ந்த திறன் மேம்பாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில்  17க்கும் மேற்பட்ட கல்லூரிகளைசேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  பங்கேற்றனர்.

போட்டிகளில்  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுசான்றிதழும் வழங்கப்பட்டது.  கணிதவியல் முதலாம் ஆண்டு மாணவி அகல்யா நன்றிகூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  கணிதவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories: