ரெட்டியப்பட்டி ஆற்றுவாரி புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடவூர், பிப்.17: மாவத்தூர் ஊராட்சி, ரெட்டியப்பட்டி ஆற்றுவாரி புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.

மாவத்தூர் ஊராட்சி ரெட்டியப்பட்டியில் கடந்த 10ஆண்டுகளாக சிலர் ஆற்றுவாரி புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இது சம்பந்தமாக அரசு அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடவூர் தாசில்தார் மைதிலி, கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா, மாவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி மற்றும் பாலவிடுதி போலீசார் முன்னிலையில் ஆற்றுவாரி ஆக்கிரமிப்பை அகற்றினார்கள்.

Related Stories: