×

காவேரிப்பட்டணத்தில் தேமுதிக கொடிநாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.13:காவேரிப்பட்டணம் பகுதியில் தேமுதிகவின் 20ம் ஆண்டு கொடி நாளையொட்டி கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேமுதிகவின் 20வது கொடிநாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் காவேரிப்பட்டணம் ஒன்றிய, பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தேமுதிக கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அன்பரசன், தேமுதிக கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் சின்னராஜ், ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, பேரூராட்சி செயலாளர் ரஞ்சித்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், துணை செயலாளர் முருகேசன் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20வது ஆண்டு கொடிநாளையொட்டி, ஓசூரில் தேமுதிகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஓசூர் ஒன்றிய பேரூர் தேமுதிக சார்பில், ஓசூர் தாலுகா அலுவலகம் முன்பும், ராயக்கோட்டை சாலையில் பஸ் நிலையம் அருகிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ராமசாமி ரெட்டி, கன்ராயன், சரவணன், யாரப், சீனிவாசன், கோவிந்தராஜ், ராஜசேகர், வெங்கடேஷ், முருகேஷ், வெங்கடேஷ், ரகுராமன், சரவணன் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Celebration ,Dharamika Flag Day ,
× RELATED மகளிர் தின விழா கொண்டாட்டம்